பிரிட்டன் அரச குடும்பத்தில் விழுந்த பாலியல் குற்றச்சாட்டு ; இளவரசர் எடுத்த முடிவு
பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லசின் இளைய சகோதரரான இளவரசர் ஆண்ட்ரூ, அரச பட்டங்களை துறப்பதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த வர்ஜீனியா கியூப்ரே என்ற பெண், பிரபல தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன் மற்றும் மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்தின் இரண்டாவது மகனும் இளவரசருமான ஆண்ட்ரூ மீது பாலியல் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரச பட்டங்கள்
இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் புகார் அளித்த வர்ஜீனியா கடந்த ஏப்ரல் மாதம் தற்கொலை செய்து கொண்டார். இந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து இளவரசர் ஆண்ட்ரூ, தற்போது அரச பட்டங்களை துறப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து இளவரசர் ஆண்ட்ரூ வெளியிட்டுள்ள அறிக்கையில், 'என் மீதான குற்றச்சாட்டுகள் மன்னர் மற்றும் அரச குடும்பத்தின் பணிகளுக்கு இடையூறாக உள்ளது.
எனவே, பொது வாழ்க்கையில் இருந்து விலக முடிவு செய்து உள்ளேன். 'என் பட்டத்தையோ அல்லது எனக்கு வழங்கப்பட்ட கவுரவங்களையோ இனி நான் பயன்படுத்த மாட்டேன்' என, தெரிவித்துள்ளார்.