உக்ரைன் அருகில் உள்ள ரஷ்ய ராணுவ தளத்தில் திடீரென துப்பாக்கிச்சூடு!
உக்ரைன் நாட்டிற்கு அருகிலுள்ள ரஷ்ய ராணுவ தளத்தில் 2 வீரர்கள் மற்ற வீரர்களை நோக்கி திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 15 பேர் காயமடைந்தனர் என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் எல்லையை ஒட்டிய தென்மேற்கு ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.
முன்னாள் சோவியத் நாட்டைச் சேர்ந்த 2 தன்னார்வல வீரர்கள் பயிற்சியின் போது மற்ற வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்றும், திருப்பித் தாக்கியதில் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதல் என அந்நாட்டு அமைச்சகம் கூறியுள்ளது.