வாழத் தகுதியற்ற நகரங்களில் மக்களை வெளியேற்றும் உக்ரைன்: வெளியான காரணம்
கொடூரமான குளிர்காலம் நெருங்கிவரும் நிலையில், ரஷ்ய துருப்புகளால் சேதப்படுத்தப்பட்டு, உருக்குலைந்த பகுதிகளில் இருந்து உக்ரைன் மக்களை அதிகாரிகள் வெளியேற்ற முடிவு செய்துள்ளனர்.
ரஷ்ய துருப்புகளின் தொடர் தாக்குதல்களால் மில்லியன் கணக்கான உக்ரைன் மக்கள் மின்சாரம் இன்றி தவிக்க விடப்பட்டுள்ளனர். மருத்துவமனைகள் முறையாக செயல்பட முடியாத நிலை.
இந்த நிலையில் மக்கள் எரிசக்தியை அளவாக பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஜனாதிபதி ஜெலென்ஸ்கி முன்வைத்துள்ளார். மட்டுமின்றி, சமீபத்தில் மீட்கப்பட்டுள்ள Kherson மற்றும் Mykolaiv பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
மின்சாரம், தண்ணீர் மற்றும் குளிர் போக்கும் வசதிகள் எதும் இல்லாததால், வாழும் நிலைமை கொடுமையாக மாறலாம் என்ற அச்சம் காரணமாக அதிகாரிகள் தரப்பு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, கெர்சனில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு மற்றும் குளிரில் இருந்து தப்ப ஏதுவான பகுதிகளுக்கு மாற விண்ணப்பிக்கலாம் என துணை பிரதமர் இரினா வெரேஷ்சுக் தெரிவித்துள்ளார்.