ஒரு வாரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட ரஷ்யவீரர்களை கொன்றொழித்த உக்ரைன்!
உக்ரேனின் பக்முத் நகரை கைப்பற்றவதற்கான சமரில் கடந்த 6 ஆம் திகதியிலிருந்து ஒரு வாரத்துக்குள் 1,100 இற்கும் அதிகமான ரஷ்ய படையினர் உயிரிழந்துள்ளனனர் என உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸேலேன்ஸ்கி கூறியுள்ளார்.
இந்தன்போது சுமார் 1500 ரஷ்ய படையினர் காயமடைந்துள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார். கைத்தொழில் நகரான பக்முத்தை கைப்பற்றுவதற்கு ரஷ்ய படையினர் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் திகதியிலிருந்து முயன்று வருகின்றனர்.
மிக நீண்டகாலமாக நடைபெறும் சமர்
2022 பெப்ரவரியில் உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு ஆரம்பமாகிய பின்னர் மிக நீண்டகாலமாக நடைபெறும் சமர் இதுவாகும். தற்போது பக்முத்தில் உக்கிரமான மோதல் நடைபெறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பக்முத்தின் கிழக்குப் பகுதியை ரஷ்ய படையினர் மற்றும் ரஷ்யாவின் தனியார் கூலிப்படையான வாக்னர் குழு ஆகியன கைப்பற்றியுள்ளன.
அந்நகரின் மேற்குப் பகுதி உக்ரேனிய படையினர் வசம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை உக்ரேனின் டோனட்ஸ்க் பிராந்தியத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 220 உக்ரேனிய படையினர் கொல்லப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது,