ரஷ்யாவிற்கு எதிராக பதிலடி கொடுக்க களமிறங்கிய உக்ரைன்!
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரைமியா (Crimea) பகுதியில் ஆளில்லா வானூர்தி கொண்டு தாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதைத் தொடர்ந்து ரஷ்யப் படையினர் உச்ச விழிப்புநிலையில் உள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். ரஷ்யா கிரைமியா தீபகற்பத்தில் தனது கட்டுப்பாட்டை வலுப்படுத்துவதாக முன்னர் கூறியிருந்தது.
அதைத் தொடர்ந்து உக்ரேன் அதன் பதிலடி நடவடிக்கைகளை முடுக்கிவிட்டதால் கிரைமியா பகுதி தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆளில்லா வானூர்திகளின் தாக்குதல்களைக் கையாள, ஆகாயத் தற்காப்புப் படைகள் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக செவஸ்டோபோல் ஆளுநர் தெரிவித்தார்.
இதுவரை மக்கள் பயன்படுத்தும் கட்டமைப்புகள் சேதமடையவில்லை என்று அவர் கூறினார்.
மேலும் குடியிருப்பாளர்கள் அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.