திருப்பியடிக்கும் உக்ரைன்; பற்றி எரியும் ரஷ்ய எண்ணெய் கிணறு!
உக்ரைன் ராணுவ ஹெலிகாப்டர்கள் ரஷ்ய எண்ணெய் கிடங்கு மீது தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய Belgorod பிராந்திய கவர்னர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ரஷ்யாவின் Belgorod நகரில் உள்ள எண்ணெய் கிடங்கு மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்ற்து.
இரண்டு உக்ரேனிய ராணுவ ஹெலிகாப்டர்கள், ராக்கெட்டுகளை ஏவி எண்ணெய் கிடங்கை தாக்கியதாக Belgorod பிராந்திய கவர்னர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் 2 பேர் காயமடைந்ததாகவும், எனினும் அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏதுமில்லை.
இந்த தாக்குதலால் எண்ணெய் கிடங்கில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாகவும் அவர் கூறினார்.
அதேவேளை , எண்ணெய் கிடங்கின் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் கவர்னர் மேலும் தெரிவித்துள்ளார்.
