ரஷ்யாவிற்கு எதிராக பதில் தாக்குதலுக்கு தயாராகும் உக்ரைன்!
ரஷ்ய படையினர் முழு அளவிலான தாக்குதலுக்கு தயாராகி வருவதால், ஷெல் தாக்குதல் இனி 24 மணி நேரமும் தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புகள் குறைவு என கிழக்கு லுஹான்ஸ் பிராந்தியத்தின் ஆளுனர் செர்ஹி ஹைடாய் தெரிவித்துள்ளார்.
இதன்படி பெப்ரவரி மாத்தின் 15ஆம் திகதிக்கு பின்னர் எந்த நேரத்திலும் மிகப்பெரிய தாக்குதல்களை எதிர்பார்க்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் குளிர்காலத்தில் கடினமான வானிலை காரணமாக போர் மந்தநிலையில் இருந்தது. தற்போது ரஷ்ய படையினர் தீவிரமான தாக்குதலுக்கு தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், டொனஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் படையினரும் ரஷ்யா தாக்குதல்களை எதிர்கொள்வதற்கு தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.