உக்ரைன் அதிபர் அதிரடி; தூக்கி எறியப்பட்ட அதிகாரிகள்!
உக்ரைன் உக்ரைன் உளவுப்பிரிவு தலைவர் உள்பட மூத்த அதிகாரிகளை அதிபர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) பணி நீக்கம் செய்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷியா 145-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றன.

அதேசமயம் இந்த போரினால் , உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் விதித்துள்ளன.
இதனிடையே, உக்ரைனில் ஆக்கிரமித்த பகுதிகளை ரஷியா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில், உக்ரைன் உளவுப்பிரிவு தலைவரை பணி நீக்கம் செய்து அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) , உக்ரைனின் அரசாங்க பொது வழக்கறிஞரையும் பணியில் இருந்து நீக்கி அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

அரசாங்க பொது வழக்கறிஞரின் அலுவலகங்களில் பணியாற்றி வருபவர்கள் மற்றும் உக்ரைன் உளவுப்பிரிவு தலைவர் உள்பட மூத்த அதிகாரிகளை அதிபர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) பணி நீக்கம் செய்துள்ளார்.

இந்த இரு பிரிவுகளை சேர்ந்த அதிகாரிகள், வீரர்கள் ரஷியாவுக்கு ஆதரவாக செயல்பட்டதால் அந்த பிரிவுகளின் தலைவர்களை நீக்கி அதிபர் (Volodymyr Zelenskyy)  உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.   
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        