ரஷ்யாவின் எரிபொருள் கிடங்கின் மீது உக்ரைன் அதிரடி தாக்குதல்
உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் ரஷ்ய எல்லைக்குள் நுழைந்து பெல்கோரோடில் உள்ள எரிபொருள் கிடங்கில் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
உக்ரைனுடனான ரஷ்யாவின் போருக்குப் பிறகு, உக்ரைன் ரஷ்ய எல்லைக்குள் படையெடுப்பது இதுவே முதல் முறை. உக்ரைன் விமானங்கள் எல்லையைத் தாண்டி குறுகிய தூரம் தாக்கியதாக பிராந்திய ஆளுநர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் கூறினார். இதில் 2 தொழிலாளர்கள் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். தாக்குதலை அடுத்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
உக்ரைன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
ஆனால் கிடங்கு தீப்பிடித்ததற்கான காரணம் வெளியிடப்படவில்லை. கடந்த புதன்கிழமை, பெல்கோரோட் அருகே உள்ள வெடிபொருள் கிடங்கில் தீப்பிடித்ததில் தொடர் வெடிப்புகள் நிகழ்ந்தன. ஆனால் தீ விபத்துக்கான காரணம் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை.