உக்ரைன் பதிலடி...ரஷ்யா வீரர்கள் 50 பேர் உயிரிழப்பு
உக்ரைனில் பல பகுதிகளில் ரஷ்யப் படைகள் முன்னேறி வரும் நிலையில், உக்ரைன் படையினரின் பதிலடியில் 50 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சுகுயிவ் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் வீடுகள், வாகனங்கள் சேதம் அடைந்து உயிர்ச்சேதம் ஏற்பட்டது. உக்ரைனில் ரஷ்யா நடத்திய குண்டுவெடிப்பு மற்றும் ஏவுகணை தாக்குதலில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 9 பேர் காயமடைந்தனர்.
உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் அலெக்ஸி ரெஸ்னிகோவ், ராணுவத்தில் சேர்ந்து போராடுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ மற்றும் ஜி7 ஆகிய நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்கும் என ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் அனெலினா பெர்போக் தெரிவித்தார்.
உக்ரைன் மீதான தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்க டாலருக்கு எதிராக ரஷ்ய ரூபிள் 9 சதவீதம் சரிந்துள்ளது.