ரஷ்ய அதிபர் புதின் சொத்துக்களை முடக்க ஆதரவு தெரிவித்த இரு பிரபல நாடுகள்!
ஐரோப்பிய நாடுகளில் உள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் (Vladimir Putin) சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷ்ய படைகளுக்கு உத்தரவிட்டுள்ள அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினுக்கு, அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் அதிபர் விளாடிமிர் புதினின் சொத்துக்களை முடக்க அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பும் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவின் சொத்துக்களையும் முடக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விளாடிமிர் புதின் மற்றும் லாவ்ரோவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்க நேட்டோ தலைவர்களுக்கு பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) ஆதரவு தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பிற்காக ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளின் ஒரு பகுதியாக அதிபர் புதின் மற்றும் லாவ்ரோவின் சொத்துகள் மீது ஐரோப்பிய யூனியன் கருவூலத் துறை தடைகளை அறிவித்துள்ளது.