ஓர் ஆண்டை நெருங்கவுள்ள உக்ரைன் - ரஷ்யா போர்! புடினின் அறிவிப்பு
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் இன்னும் சில வாரங்களில் ஓரு ஆண்டை நெருங்கவுள்ளது.
இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் உருக்குலைந்து போயின. அதேவேளையில் இந்த போரில் ரஷ்யாவும் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது.
போரில் ஆயிரக்கணக்கான ரஷ்ய துருப்புக்கள் உயிரிழந்துள்ளனர். ஆனாலும் போரில் இருந்து பின்வாங்காத ரஷ்யா தொடர்ந்து வீரர்களை அணிதிரட்டி போர் முனைக்கு அனுப்பிவருகிறது.
இந்தநிலையில், உக்ரைன் பகுதிகளைக் கைப்பற்ற ரஷ்யா தீவிரமாக போரிட்டு வரும் நிலையில் உக்ரைனும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் ரஷ்யாவுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
சமீபமாக ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. உக்ரைனின் முக்கிய கட்டிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
கீவ் நகரின் முக்கிய கட்டிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, டினிப்ரோவில் உள்ள அடுக்குமாடி கட்டடங்களின் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் 'உக்ரைனில் நுழைந்துள்ள ரஷ்ய துருப்புக்கள் போரில் வெல்வதில் எந்த சந்தேகமும் இல்லை' எனத் தெரிவித்துள்ளார்.