உக்ரைன் - ரஷ்யா போர்; பெரும் நிறுவனங்கள் வரலாறு காணாத அளவிற்கு பணவீக்கத்தை எதிர்கொள்ளும்!
உக்ரைன் மீதான தாக்குதல்- ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் என்பவை சம்பந்தப்பட்ட இருநாடுகளுக்கு மட்டுமல்லாமல் உலகத்தையே பாதிப்புக்குள்ளாக்கத் தொடங்கியுள்ளதாக உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான் எலான் மஸ்க் (Elon Musk) தெரிவித்துள்ளார்.
இவ்வளவுக்கும் மேற்குலக நாடுகள் விதித்த தடைகளில் உலோகங்கள், எண்ணெய் போன்றவை கிடையாது. அப்படி இருந்தும் கார்களில் பயன்படுத்தப்படும் உலோகங்கள், சிப்கள், எரிபொருள் என அனைத்தின் விலைகளும் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனால், மின்சார வாகனங்களை தயாரிக்கும் தனது டெஸ்லா நிறுவனமும், விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ்எக்சும் பணவீக்கத்தை சந்தித்துள்ளதாக அந்நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியும் உலக கோடீஸ்வரருமான எலான் மஸ்க் Elon Musk) தெரிவித்துள்ளார்.
தனது நிறுவனங்களுக்கு மட்டும் இந்த நிலை இல்லை என ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், பணவீக்க விகிதக் கண்ணோட்டம் குறித்த கருத்துகளை தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் உக்ரைன்-ரஷ்யா மோதலால் 2008-ம் ஆண்டுக்குப் பிறகு பொருட்களின் விலை உச்ச நிலைக்கு சென்றுள்ளமை தொடர்பாக வெளியான கட்டுரையையும் எலான் மஸ்க் Elon Musk) மறுபதிவு செய்துள்ளார்.