உக்ரைனுக்கு அமெரிக்க படைகளை அனுப்பப் போவதில்லை! ஜோ பைடன்
ரஷ்யா மீதான கூடுதல் தடைகள் பற்றிய விவரத்தை அறிவித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், (Joe Biden) உக்ரைனுக்கு அமெரிக்க படைகளை அனுப்பப் போவதில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.
அமெரிக்க படைகள் உக்ரைனில் போரிட ஐரோப்பாவிற்குச் செல்லவில்லை, மாறாக நேட்டோ நட்பு நாடுகளைப் பாதுகாக்கவும், கிழக்கில் உள்ள அந்த நட்பு நாடுகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் கண்காணிப்பில் ஈடுபடவும் அனுப்பப்பட்டுள்ளன" என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், (Joe Biden) தெரிவித்துள்ளார்.
மேலும் "அமெரிக்க சக்தியின் முழு பலத்துடன் நேட்டோ பிரதேசத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் அமெரிக்கா பாதுகாக்கும்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Watch live as I deliver remarks on Russia’s unprovoked and unjustified attack on Ukraine. https://t.co/fsc84Sq6F6
— President Biden (@POTUS) February 24, 2022
நேட்டோ முன்னெப்போதையும் விட ஒற்றுமையாக இருப்பதாக தான் நம்புவதாகவும், அமெரிக்காவும் பிற நேட்டோ நாடுகளும் தங்களுடைய ஒப்பந்த கடமைகளை நிறைவேற்றும் என்பதில் "சந்தேகமில்லை" என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
மேலும், பால்டிக் பகுதியில் உள்ள லாத்வியா, எஸ்டோனியா, லித்துவேனியா, போலந்து மற்றும் ரூமேனியா உட்பட ரஷ்யாவால் அச்சுறுத்தலுக்கு ஆளாகும் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நேட்டோ நாடுகளுக்கு ஆயிரக்கணக்கான அமெரிக்க தரைப்படை மற்றும் பிற படைகள் அனுப்பப்பட்டுள்ளன என்றும் அதிபர் ஜோ பைடன் கூறினார்.