உக்ரைன் ரஷ்யா போர் பதற்றம்: உயர்ந்தது கச்சா எண்ணெய் விலை
உக்ரைன் மீது ரஷ்யா போர் எதிரொலி காரணமாக கச்சா எண்ணெய் விலை 8 ஆண்டுகளில் இல்லாதவாறு 100 டொலருக்கு உயர்ந்துள்ளது.
2014க்குப் பிறகு கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 100 டாலர் என்ற அளவில் இருக்கும் நிலையில், இது ஐரோப்பிய நாடுகளில் எரிசக்தி விநியோகத்தைப் பாதிக்கும் என்ற கவலை உள்ளது. உலகில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் இரண்டாவது பெரிய நாடான ரஷ்யா, முக்கியமாக ஐரோப்பிய நாடுகளுக்கு கச்சா எண்ணெயை அதிகளவில் ஏற்றுமதி செய்கிறது.
கூடுதலாக, உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு சப்ளையர் ரஷ்யா, ஐரோப்பாவின் மொத்த விநியோகத்தில் சுமார் 35 சதவீதத்தை வழங்குகிறது. இதற்கிடையில், உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதால் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலர் வரை உயர்ந்தது.
2014ல் இருந்து கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டாலர்களை எட்டியுள்ளது.இதனால் பெட்ரோலியம், டீசல் உட்பட உலகம் முழுவதும் பெட்ரோல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.