ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய தாக்குதல்... 15 அப்பாவி மக்கள் உயிரிழப்பு!
ரஷ்யாவின் பெல்கோரட் நகரில் உக்ரைன் நடத்திய வான் தாக்குதலில் அடிக்குமாடி கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 15 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டு வரும் போர் 2 ஆண்டுகளை கடந்து நீடித்து வருகின்றது.
இவ்வாறான நிலையில் நேற்றையதினம் ரஷ்யாவின் பெல்கோரட் நகரில் உக்ரைன் நடத்திய வான் தாக்குதலில் 10 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது.
அந்த குடியிருப்பில் வசித்தவர்கள் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கினர். மீட்புபணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.
அருகில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களும் இடிந்து விழும் என்ற அச்சம் ஏற்பட்டது. இதனால் அந்த குடியிருப்பில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
இது தொடர்பில் பெல்கோரட் பிராந்திய கவர்னர் வியாசெஸ்லவ் கிளாட்கோவ் கூறுகையில்,
"குடியிருப்பு கட்டிடத்தின் இடிபாடுகளை அகற்றும் முக்கிய பகுதி நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை 15 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
நேற்று மாலை நடந்த தாக்குதலில் பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 11-ம் திகதி நடந்தப்பட்ட தாக்குதலின்போது காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதன்மூலம் உக்ரைனின் தாக்குதலில் அப்பாவி மக்கள் 19 பேரை இழந்திருக்கிறோம்' என்றார்.