30 ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன்!
உக்ரைனில் ஈரானைச் சேர்ந்த 30 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக அதிபர் ஜெலன்ஸ்கி(Volodymyr Zelenskyy) கூறியுள்ளார்.
இது குறித்து தனது இரவு உரையின்போது கருத்து வெளியிட்ட அவர், ஈரானில் தயாரிக்கப்பட்ட ஹாஹெட் 136 ரக காமிகேஸ் ட்ரோன்கள் உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் நேற்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறினார்.
ரஷ்யாவால் பயன்படுத்தப்பட்ட இந்த ட்ரோன்கள் அதன் இலக்குகளை அடையமுடியவில்லை என்றம், ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்தார். ஈரான் சமீபத்தில் உக்ரைன் மீது தாக்குதல்களை மேற்கொள்வதற்காக ட்ரோன்களை வழங்கி ரஷ்யாவுக்கு உதவியிருந்ததை ஒப்புக்கொண்டுள்ளது.
இதேவேளை உக்ரைன் தலைநகர் கீவில் ரஷ்யா மீண்டும் ஆளில்லா விமான குண்டுகளை மூலம் நேற்று தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
இது குறித்து கீவ் நிர்வாகம் டெலிகிராம் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கீவ் நகரம் மீது தானாகவே வெடித்து சேதத்தை ஏற்படுத்தக் கூடிய 23 ஆளில்லா விமானங்கள் நகரின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து அனுப்பப்பட்டதாக தெரிவித்துள்ளது.
அவற்றில் 18 விமாங்களை உக்ரைன் வான்பாதுகாப்பு ஏவுகணைகள் இடைமறித்து அழித்தன. ஏனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் யாரும் உயிரிழக்கவோ, காயமடையவோ இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.