மீண்டும் ரஷய விமானங்களை தகர்த்த உக்ரைன்!
ரஷ்யாவின் வடகிழக்கில் உள்ள பஸ்கோவ் நகரில் உள்ள விமானநிலையத்தை இலக்குவைத்து உக்ரைன் மேற்கொண்ட ஆளில்லா விமானதாக்குதலில் பல விமானங்கள் சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் உக்ரைனின் தாக்குதலை இராணுவம் முறியடிக்கின்றது என அப் பகுதியின் ஆளுநர் தெரிவித்துள்ளார் அத்துடன் பாரிய தீயை காண்பிக்கும் வீடியோவை அவர் பதிவிட்டுள்ளார்.
76 போக்குவரத்து விமானங்கள் சேதம்
தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் நான் நின்றிருந்தேன் உயிரிழப்பு எதுவுமில்லை என ஆளுநர் தெரிவித்துள்ளார். அதேசமயம் நான்கு இலுசின் 76 போக்குவரத்து விமானங்கள் சேதமடைந்துள்ளன என உறுதிப்படுத்தப்படாத ரஸ்ய தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவின் பஸ்கோவ் நகரம் உக்ரைனிலிருந்து 600 கிலோமீற்றர் தொலைவில் எஸ்டோனியாவின் எல்லைக்கு அருகில் உள்ளது.
அதேசமயம் உக்ரைன் ரஷ்யாவிற்குள் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் குறித்து கருத்துகூறுவதை தவிர்த்துவந்துள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பில் அவசரநிலைக்கான அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ள டாஸ், விமானங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆளில்லா விமானதாக்குதல் காரணமாக நான்கு விமானங்கள் சேதமடைந்தன தீப்பிடித்ததில் இரண்டு விமானங்கள் வெடித்துச்சிதறின என டாஸ் தெரிவித்துள்ளது.