உக்ரைன் - ரஷ்ய எல்லையில் திடீர் பதற்றம்! சீறி கிளம்பிய குண்டுகள்
உக்ரைனிலிருந்து ரஷ்யாவிற்குள் நுழைய முயன்ற 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக்கலாம் என உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்திருந்தன.
இதனால் சர்வதேச அளவில் பதற்றமான சூழல் உருவாகி இருக்கிறது. உக்ரைனுக்கு ஆதராவாக நேட்டோ நாடுகள் களத்தில் இறங்கியது. ரஷ்யாவுக்கு ஆதரவாக சீனாவும் களத்தில் இறங்கியது.
இதனால் ஐரோப்பாவுக்கு ஆபத்து என்ற அறிவித்தது அமெரிக்கா.
கடந்த சில வாரங்களாகவே உக்ரைன் எல்லையில் ரஷ்யா தொடர்ந்து தனது ராணுவத்தைக் குவித்து வருகிறது. மேலும், அதிநவீன ஆயுதங்களையும் ரஷ்யா அனுப்பி வருகிறது.
உக்ரைன் எல்லையில் சுமார் 1.50 லட்சம் ராணுவ வீரர்களை ரஷ்யா குவித்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, 80 ஆயிரம் வீரர்கள் அங்கிருந்த நிலையில், இப்போது வீரர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.
சமீபத்தில் ரஷ்ய அதிபர் புதின் தலைமையில் அணு ஆயுத பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த போர் பதற்றத்தை தவிர்க்க பல நாட்டுத் தலைவர்கள் ஈடுபட்டுவருகிறார்கள்.
எந்த விவகாரத்தையும் பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க விரும்புவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ஆனால் ரஷ்யா இது எதற்குமே சரியான பதிலளிக்காமல் இருந்துவந்தது.
உக்ரைனிலிருந்து ரஷ்யாவிற்குள் நுழைய முயன்ற 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைன் எல்லையில் ரஷ்யா துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது அம்பலமாகியுள்ளது.
ரஷ்ய துப்பாக்கிச் சூட்டில் பலியானது உக்ரைன் ராணுவ வீரர்களா என்ற யூகங்கள் கிளம்பியுள்ளன.
உக்ரைனின் புரட்சி படையினரை ரஷ்யா சுட்டதா அல்லது உக்ரைன் ராணுவ வீரர்களை சுட்டதா என்பது தெரியவில்லை. ஒருவேளை உக்ரைன் ராணுவ வீரர்கள் சுடப்பட்டிருந்தால் பெரும் போர் பதற்றம் வெடிக்கும் வாய்ப்புள்ளது.
போருக்கே இது இட்டுச் செல்லவும் வாய்ப்புள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மிகப்பெரிய அளவில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.
துப்பாக்கிச்சூட்டுக்கு இதுவரை உக்ரைன் தரப்பு எந்த விளக்கமும் இதுவரை கொடுக்கவில்லை. டாங்கிகள், பீரங்கிகள் உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்களை எல்லைக்கு அருகே முன் களத்திற்கு அனுப்பியுள்ளது ரஷ்யா.உக்ரைன் எல்லைக்கு வடக்கே சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரஷ்ய நகரமான வாலுய்கிலும் ரஷ்யா அதிகப்படியான ராணுவத்தைக் குவித்துள்ளது சாட்டிலைட் படங்களில் தெளிவாகத் தெரிகிறது.