உக்ரைன் சோர்ந்து விடாது வெற்றிபெறும் ; நம்பிக்கையில் வெளியுறவுத்துறை அமைச்சர்
உக்ரைன் மீது ரஷ்யா முழு அளவிலான போரை துவக்கி உள்ளதாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய படைகளில் உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ஏவுகணை மழை பொழிந்துவருகின்றன.
உக்ரைனில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றும் முனைப்பில் ரஷ்யா தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் ரஷ்யா துவக்கிய தாக்குதல் தொடர்பாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமைட்ரோ குலேபா கூறியதாவது, “உக்ரைன் மீது ரஷ்யா முழு அளவிலான போரை துவக்கி உள்ளது.அமைதியாக இருந்த உக்ரைன் நகரங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.
உலக நாடுகள் இதில் தலையிட்டு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
இதன்படி பேரழிவு ஏற்படுத்தும் நடவடிக்கையை ரஷ்யா துவக்கி உள்ளது.
உக்ரைன் தன்னை தற்காத்துக் கொண்டு வெற்றி பெறும் என்றும் முழு நம்பிக்கையில் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமைட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.