உயிரை காக்க உக்ரைனில் இருந்து அமெரிக்கா சென்ற பெண் கொலை
உக்ரைனில் போர்ச் சூழலில் இருந்து தப்பித்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த இளம் பெண் ஒருவர் அமெரிக்காவில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
வட கரோலினாவில் வசித்து வந்த உக்ரைனியப் பெண் இரினா ஜருட்ஸ்கா கடந்த மாதம் 22 ஆம் திகதி, சார்லோட்டில் ஒரு உள்ளூர் ரெயிலில் பயணம் செய்டுக்கொண்டிருந்தார்.
ரெயிலில் இரினாவின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த நபர் ஒருவர், தனது பாக்கெட்டிலிருந்து கத்தியை எடுத்து இரினாவைத் தாக்கினார். கடுமையான காயங்கள் மற்றும் இரத்தப்போக்கு காரணமாக இரினா சம்பவ இடத்திலேயே இறந்தார்.
கொலை செய்த நபர் அடுத்த நிறுத்தத்தில் இறங்கி தப்பினார். டிகார்லோஸ் என்ற அந்த நபரை அடையாளம் கண்ட போலீஸ் அவருக்கு ஏற்கனவே குற்றப்பின்னணி இருப்பதாக தெரிவித்துள்ளது.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள அவரிடம் கொலை செய்தததற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.