ரஸ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கே வெற்றி!
உக்ரைனுக்கு ஜெர்மனி ஆயுதங்கள் வழங்கினாலும் வழங்கா விட்டாலும், ரஸ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் வெல்லும் என போலந்து பிரதமர் மாடேயஸ் மோராவெய்க்கி கூறியுள்ளார்.
ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்களை முறியடிக்க பீரங்கிகளைத் தருமாறு ஜெர்மனியிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்க்கி கோரிக்கை விடுத்திருந்தார்.
எனினும் அதற்கு இன்னும் ஜெர்மனி தரப்பில் பதில்தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், உக்ரைனுக்கு ஜெர்மனி உதவினாலும் உதவாவிட்டாலும் ஐரோப்பா நாடுகளின் துணையோடு போரை உக்ரைன் வெல்வது உறுதி என போலந்து பிரதமர் கூறியுள்ளார்.
அதேவேளை ரஷ்யா -உக்ரைன் இடையிலான போரால் அந்த இரு நாடுகளும் மட்டுமன்றி உலகம் மொத்தமும் பல்வேறு நெருகடிகளை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.