ரஷ்யாவின் மிலேச்சத்தமான தாக்குதலில் பிறந்தவுடன் உயிரிழந்த உக்ரைன் குழந்தை
உக்ரைனின் தென்பகுதியில் உள்ள மருத்துவமனை மீது ரஸ்யா மேற்கொண்ட தாக்குதலில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதுடன் தாயார் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சபோரிஜியா பகுதியில் உள்ள வில்னியான்ஸ் என்ற நகரின் மகப்பேற்று மருத்துவமனை மீது ரஸ்யா தாக்குதலை மேற்கொண்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாய் குழந்தையை பிரசவித்து ஒரு சில நிமிடங்களில் இந்த தாக்குதல் இடம்பெற்றது. சம்பவத்தில் மருத்துவர் ஒருவரும் கட்டிட இடிபாடுகளிற்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளார் என உக்ரைன் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட மருத்துவமனை உள்ள பகுதியை நோக்கி ரஸ்ய படையினர் பாரிய ரொக்கட் தாக்குதலை மேற்கொண்டனர் என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ரஷ்யா ஒன்பது மாத போரினால் சாதிக்க முடியாததை பயங்கரவாதம் கொலை மூலம் சாதிக்க முயல்கின்றதாகவும் அது ஒருபோதும் சாத்தியமாகாது எனவும் உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.