திருப்பியடிக்கும் உக்ரைன்; செய்வதறியாது திகைக்கும் ரஷ்யா!
உக்ரைன் -ரஷ்ய போர் ஆரம்பித்து முடிவில்லாமல் நீண்டுகொண்டே செல்கின்றது. போரின் ஆரம்பத்தில் ரஷ்யாவின் கை ஓங்கியிருந்த போதும், தற்போது உக்ரைனின் தாக்குதல் உக்கிரமாகியுள்ளதால் ரஷ்யா சமாளிக்க முடியாது அதிர்ச்சியில் உள்ளது.
இந்நிலையில் ரஷ்யாவிற்குச் சொந்தமான பாலமொன்றை உக்ரைன் படைகள் அழித்துள்ளதாக கூறப்படுகின்றமை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உக்ரைன் படைகள் அழித்த் கிளாஷ்கோவில் உள்ள சேம் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள குறித்த பாலமானது மூலோபாய ரீதியாக மிகவும் முக்கியமானது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் உக்ரைன் இராணுவம், ரஷ்ய எல்லையில் மூன்று கிலோமீட்டர் வரை முன்னேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உக்ரைன் இராணுவத்தின் தலைவர் ஒலெக்சாண்டர் செர்ஸ்கி அறிக்கை ஒன்றினூடாக இதனைத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை உக்ரைனின் இந்த தொடர் தாக்குதல்கள் காரணமாக 120,000க்கும் மேற்பட்ட ரஷ்யர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.