2 வடகொரிய வீரர்களை கைது செய்த உக்ரைன் படையினர்! சிக்கிய ரஷ்யா
ரஷ்யாவில் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள குர்ஸ்க் பகுதியில் 2 வடகொரிய வீரர்களை உக்ரைனின் பாதுகாப்புப் படையினர் கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் தனது எக்ஸ் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி,
குர்ஸ்க் பகுதியில் வட கொரிய இராணுவ வீரர்களை நமது வீரர்கள் சிறைபிடித்துள்ளனர். காயமடைந்த 2 வீரர்கள், கீவ் -க்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் இப்போது பாதுகாப்பு படை கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது எளிதான காரியமல்ல. உக்ரைனுக்கு எதிரான போரில் வட கொரியாவின் ஈடுபாட்டிற்கான எந்த ஆதாரத்தையும் விட்டுவைக்காமல் அழிக்க களத்தில் சண்டையிட்டு காயமடைந்த வட கொரிய வீரர்களை அவர்களே கொலை செய்வார்கள்.
Our soldiers have captured North Korean military personnel in the Kursk region. Two soldiers, though wounded, survived and were transported to Kyiv, where they are now communicating with the Security Service of Ukraine.
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) January 11, 2025
This was not an easy task: Russian forces and other North… pic.twitter.com/5J0hqbarP6
இதை முறியடித்து 2 வட கொரிய வீரர்களை எங்கள் படை சிறைபிடித்துள்ளது பாராட்டத்தக்கது.
அனைத்து போர்க் கைதிகளையும் போலவே, இந்த 2 வட கொரிய வீரர்களும் தேவையான மருத்துவ உதவியைப் பெறுகிறார்கள்.
இந்தக் கைதிகளை பத்திரிகையாளர்கள் அணுக அனுமதிக்குமாறு படையினருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். என்ன நடக்கிறது என்பது பற்றிய உண்மையை உலகம் அறிய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.