உக்ரேனிய விமானவிபத்து; கனடா நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
உக்ரேனிய விமான விபத்துக்குள்ளான வழக்கில் பாதிக்கப்பட்ட 6 பேரின் குடும்பத்திற்கு 84 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க கனடா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கனடாவின் இந்த முடிவினால் ஈரானுக்கும் கனடாவுக்கும் இடையே உள்ள உறவு மேலும் மோசமடையக்கூடும் என்று கூறப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உக்ரேனின் அனைத்துலக விமான நிறுவனத்தைச் சேர்ந்த விமானம் ஒன்றை ஈரான் தவறுதலாக சுட்டு வீழ்த்தியதில் விமானத்தில் பயணம் செய்த 176 பேரும் உயிரிழந்தனர்.
ஈராக்கில் நிலை கொண்டிருந்த அமெரிக்கா மீது ரொக்கெட் தாக்குதல் நடத்திய பின்னர், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாமென்ற பதற்றத்தில் , இந்த சம்பவம் தவறுதலாக தாக்கப்பட்டதாக டெஹ்ரான் வலியுறுத்தியது.
இந்த நிலையில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினர் ஈரானுக்கு எதிராக நீதிமன்ற வழக்குத் தொடுத்திருந்தனர். ஈரானும் ஏனைய அதிகாரிகளுமே தாம அந்தச் சம்பவத்திற்குக் காரணம் என நம்புவதாக அவர்கள் தெரிவித்தனர்.
அதன் பின்னனியில் கனடாவில் உள்ள ஈரானியச் சொத்துகளை முடக்கி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குமாறு கனடா வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

