புதிய உலக வரைபடம் உருவாக்க ஐ.நா. தீர்மானம்; விமர்சிக்கும் அமெரிக்கா
தற்போதைய உலக வரைபடத்தில் காணப்படும் தவறுகளைத் திருத்தி, துல்லியமான புதிய உலக வரைபடத்தை உருவாக்கக் கோரும் ஐ.நா. பொதுச் சபைத் தீர்மானத்துள்ளது.
டோகோ முன்மொழிந்த இந்தத் தீர்மானத்துக்கு 164 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன.

ஆறு நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்த நிலையில், அமெரிக்கா மட்டும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்துள்ளது.
16ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட தற்போதைய வரைபடம், பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள நாடுகளை சிறியதாகவும், தொலைதூரப் பகுதிகளை பெரிதாகவும் காட்டுவதாகத் தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் ஆப்பிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளின் உண்மையான பரப்பளவு சரியாகப் பிரதிபலிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வரைபடம் கண்டங்கள் மற்றும் பிராந்தியங்களின் உண்மையான பரப்பளவை துல்லியமாக பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட வேண்டும் என இந்தியா தெரிவித்துள்ளது.
எனினும், இத்தகைய விடயங்களில் கவனம் செலுத்துவது ஐ.நா. மீதான நம்பகத்தன்மையை மேலும் பாதிக்கும் என அமெரிக்கா விமர்சித்துள்ளது.