கனடாவில் நீச்சல் குளம் ஒன்றில் பேச்சு மூச்சில்லாமல் கிடந்த குழந்தை: பதைபதைக்க வைத்த ஒரு சம்பவம்

Balamanuvelan
Report this article
கனடாவில் நீச்சல் குளம் ஒன்றில் மூன்று வயது ஆண் குழந்தை ஒன்று பேச்சு மூச்சின்றிக் கிடந்த சம்பவம் ஒன்று சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை, Brossard என்ற பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிற்கு பொலிசார் அழைக்கப்பட்டுள்ளார்கள்.
அங்கு சென்ற பொலிசார், மூன்று வயது ஆண் குழந்தை ஒன்று நீச்சல் குளத்தில் பேச்சு மூச்சின்றிக் கிடப்பதைக் கண்டு மருத்துவ உதவிக்குழுவினரை அழைக்க, பல மருத்துவ உதவிக்குழுக்கள் அங்கு விரைந்துள்ளன.
அந்த சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். மாலை 7 மணியளவில் அந்த சிறுவனது உடல் நிலை குறித்து பேட்டியளித்த செய்தித்தொடர்பாளர் ஒருவர், அவனது நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்தார்.
குழந்தை எப்படி நீச்சல் குளத்தை அடைந்தான் என்பது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த சம்பவம், அப்பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.