தலைமறைவான பொலிஸ்..மக்களை நாடிய பாரிஸ் காவல்துறை
காவல்துறை அதிகாரியை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார்.
வியாழன் அன்று பாரிஸ் காவல்துறை உதவிக்கு அழைத்தது. அர்னாட் பி என்ற போலீஸ் அதிகாரி தேடப்பட்டு வந்தார். ஜன., 28ல், காதலியை கொன்றதாக, அதிகாரி குற்றவாளி என, தீர்ப்பளிக்கப்பட்டு, தப்பியோடினார்.
இவ்வார திங்ககிழமை, உள்துறை அமைச்சர் Gérald Darmanin இச்சம்பவம் தொடர்பில் தெரிவிக்கையில், “குற்றவாளி தொடர்ந்தும் தேடப்பட்டு வருகின்றார். பல காவல்துறையினர் மற்றும் ஜொந்தாமினர் இவரை தேடி வருகின்றனர்!” என தெரிவித்தார்.
ஜனவரி 28 அன்று, பாரிஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் இருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்ட காதலன் கொலையுடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி ஒருவர் தேடப்பட்டு வருகிறார்.