யுனைடெட் ஹெல்த்கேர் தலைமை செயல் அதிகாரி சுட்டுகொலை! அமெரிக்காவில் சம்பவம்
அமெரிக்காவில் யுனைடெட் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பிரையன் தாமஸ் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றையதினம் (04-12-2024) காலை நியூயார்க்கின் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அவர் வந்தபோது மறைந்திருந்த மர்ம நபர் ஒருவர், தாமசை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த தாமஸ், அருகில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பொலிஸார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கொலையாளியை தேடி வருகின்றனர்.
யுனைடெட் ஹெல்த்கேர் சார்பில் வருடாந்திர முதலீட்டாளர் மாநாடு அந்த ஹோட்டலில் இன்று நடைபெறுவதாக இருந்தது.
மாநாட்டில் பங்கேற்பதற்காக தாமஸ் வந்தபோது திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார்.