ஐ.நாவில் இந்திய ஊடகங்களின் கேள்விக்கு பதிலளிக்காமல் சென்ற ஜஸ்டின் ட்ரூடோ!
ஐ.நாவிற்கு சென்றுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம், இந்திய ஊடகங்கள், ஹர்திப் சிங் நிஜ்ஜர் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பிய போது அது தொடர்பில் பதிலளிக்காமல் சென்றுள்ள விடயம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் கனடாவில் காலீஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் ஹர்தீப்சிங் நிஜ்ஜர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்திய அரசின் உளவாளிகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் பேசியது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
இவ்வாறான நிலையில், ஐக்கிய நாடுகள் சபைக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் சென்றார். அப்போது இந்திய ஊடகங்கள் அவரிடம் கேள்வி கேட்க முயன்றனர். இதை கவனித்த ஜஸ்டின் ட்ரூடோ அங்கிருந்து விரைவாக விலகி சென்றார்.
இந்திய ஊடகங்கள் காலிஸ்தான் விவகாரம் தொடர்பில் ஏதேனும் கேள்வி கேட்கும்போது அவர் அளிக்கும் பதில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தலாம் என நினைத்து ஜஸ்டின் ட்ரூடோ ஊடகங்களை தவிர்த்துவிட்டு சென்றார்.
இதுதொடர்பான காணொளி தற்போது இணையதளங்களில் வெளியாகி தீவிரமாக பரவி வருகிறது.