பாலஸ்தீன அரசை அதிகாரபூர்வமாக அங்கீகரித்த பிரான்ஸ் ; கடும் கோபத்தில் இஸ்ரேல் பிரதமர்
பாலஸ்தீன அரசை பிரான்ஸ் அதிகாரபூர்வமாக அங்கீகரிப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் அறிவித்தார். இதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
இது குறித்து, அவர் கூறியதாவது: மத்திய கிழக்கில் அமைதிக்கான வரலாற்று உறுதிப்பாட்டிற்கு இணங்க, பிரான்ஸ் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும். வரும் செப்டம்பரில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக்கு முன் இந்த அறிவிப்பை வெளியிடுவேன் என குறிப்பிட்டுள்ளார்.
இது ஆபத்தானது
இதற்கு பதிலளிக்கும் விதமாக, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இந்த முடிவை விமர்சித்தார். இது குறித்து அவர் கூறியதாவது: இது ஆபத்தானது மற்றும் தவறானது. பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது பயங்கரவாதத்திற்கு வெகுமதி அளிக்கிறது.
பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலுடன் இணைந்து அமைதியை நாடவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார். அதேநேரத்தில் பாலஸ்தீனத் தலைவர்கள் பிரான்சின் ஆதரவை வரவேற்றனர். பாலஸ்தீனத்தை அங்கீகரித்த மிகப்பெரிய மற்றும் மிகவும் சக்திவாய்ந்த ஐரோப்பிய நாடு பிரான்ஸ்.
140 க்கும் மேற்பட்ட நாடுகள் இப்போது பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.