அமெரிக்காவில் 9 குழந்தைகள் உட்பட 19 பேர் உடல் கருகி பரிதாப உயிரிழப்பு
அமெரிக்காவில் 9 குழந்தைகள் உட்பட 19 பேர் உடல் கருகி பரிதாப உயிரிழநத சமபவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா- நியுயோர்க் நகரில் பிரான்க்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருபில் 19 மாடிகள் இருந்துள்ளது. நேற்றையதினம் இந்த கட்டிடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தளத்தில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது.
இதனை அடுத்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் உடனடியாக, தகவல் கிடைத்த சில நிமிடங்களில் 200 க்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கரும்புகை அதிக அளவில் இருந்ததாலும் தீயை அணைப்பது சிரமமாக இருந்துபோதும் கடும் போராட்டத்துக்கு பின்னர் தீயை அணைத்துள்ளனர்.
எனினும் இந்த தீவிபத்தில் 9 குழந்தைகள் உட்பட 19 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
மேலும், 32 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.