பயணிகள் வாகனம் மீது மோதிய பல்கலைக்கழக பஸ்! 14 பேர் உயிரிழப்பு
கென்யா - தலைநகர் மேற்கில் பயணிகள் வாகனம் மீது பல்கலைக்கழக வாகனம் ஒன்று மோதியதில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (வியாழக்கிழமை) நடைபெற்றுள்ளது.
விபத்தின் போது சம்பவ இடத்திலேயே 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்கையில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
குறித்த பேருந்தில் 30 பேர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பலி எண்ணிக்கை மேலும் அதிககரிக்கும் எனவும் அஞ்சப்படுகிறது.
துலைநகர் நைரோபியில் இருந்து நகுரு நகரை நோக்கி சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.