காஸாவை நோட்டமிடும் ஆளில்லா அமெரிக்க ட்ரோன் கமராக்கள்
காஸா மீது ஆளில்லா ட்ரோன் விமானங்களைப் பயன்படுத்தி ஹமாஸ் வசமுள்ள பிணை கைதிகளை கண்டுப்பிடிக்க MQ-9 Reaper ட்ரேகன்களை பயன்படுத்தி வருவதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
மணிக்கு 440 கி.மீ வேகத்தில் செல்லும் இந்த ட்ரோன் விமானம் தொடர்ச்சியாக 27 மணிநேரம் வானில் பறந்தபடி ஏவுகணை தாக்குதல் நிகழ்த்தக்கூடிய வல்லமை படைத்தது.
அதனுள் உள்ள அதிநவீன தெர்மல் சென்சார் கேமராக்கள் மூலம் 25 ஆயிரம் அடி உயரத்திலிருந்தப்படி மனித உடலின் வெப்பத்தை வைத்து பிணை கைதிகளின் இருப்பிடத்தை கண்டுபிடித்து இஸ்ரேல் இராணுவத்திற்கு தகவல் அளிக்கும் எனக் கூறப்படுகிறது.
ஒரு மணி நேரம் போர் விமானங்களை இயக்க ஆறரை இலட்ச ரூபாய் செலவாகும் நிலையில் பாதி செலவில் இவற்றை இயக்கிவிடலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.