இனி திருமணமாகாதவர்களும் குழந்தைகளை தத்தெடுக்கலாம் ; இத்தாலியின் அறிவிப்பு
இத்தாலியில் திருமணம் ஆகாதவர்களும் குழந்தைகளை தத்தெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருமணமாகாதவர்கள் வெளிநாட்டு குழந்தைகளைத் தத்தெடுக்கலாம் என இத்தாலியின் அரசியலமைப்பு நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இத்தாலியின் சட்டம்
திருமணமான தம்பதியர் மட்டுமே வெளிநாட்டு குழந்தையைத் தத்தெடுக்க முடியும் என இதுவரை இத்தாலியில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.
இதனை எதிர்த்து குழந்தை தத்தெடுப்புக்கான இத்தாலிய சங்கம் நீதிமன்றில் வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் திருமணம் ஆகாதவர்களும் குழந்தைகளைத் தத்தெடுக்க முடியும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதே போல் ஜேர்மனி, பிரான்ஸ்,பிரித்தானியா போன்ற நாடுகளிலும், திருமணம் ஆகாதவர்கள் குழந்தைகளைத் தத்தெடுக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.