ஒலிம்பிக் குத்துச் சண்டையில் நடுவரின் நியாயமற்ற முடிவு
ஒலிம்பிக் குத்துச் சண்டையில் நடுவரின் நியாயமற்ற முடிவால் தாம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டதாக மேரிகோம் (Mary Kom)கவலை வெளியிட்டுள்ளார்.
இந்திய மகளிர் குத்துச்சண்டையின் நம்பிக்கை நட்சத்திரமான மேரிகோம் ஒலிம்பிக் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கொலம்பியா வீராங்கனை இன்கிரிட் லோரெனாவை (Ingrid Lorena) எதிர்கொண்டார்.
முதல் சுற்றில் 4-1 என்ற கணக்கில் பின் தாண்டிய மேரிகோம், அடுத்த இரு சுற்றுகளையும் 3-2, 3-2 என்ற கணக்கில் கைப்பற்றினார். 3ல் இரண்டு சுற்றுகளை கை பற்றியதால் வெற்றி பெற்றோம் என்ற மகிழ்ச்சியில் இருந்த மேரிகோமிற்கு அதிர்ச்சி காத்திருந்தது.
ஏனெனில் 3 சுற்றுகளிலும் 5 நடுவர்கள் வழங்கிய புள்ளிகளின்படி, மேரிகோம் 142 புள்ளிகளும், இன்க்ரீட் 143 புள்ளிகளும் பெற்றனர். இதனால் இன்கிரிட் 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால் மேரிகோம் (Mary Kom) கலக்கம் அடைந்தார்.
நடுவர்களின் நியாயமற்ற முடிவால் தனக்கு தோல்வி கிடைத்துவிட்டதாக தெரிவித்துள்ள மேரிகோம், இது போன்ற மிகப்பெரிய போட்டிகளில் நடுவர்களின் முடிவு வெளிப்படைத்தன்மையுடன் நியாயமாக இருக்க வேண்டும் என்றும் தாம் பலமுறை கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது உணர்ச்சிப்பூர்வமான மனநிலையில் உள்ளதால் இதற்கு நீதி கேட்கும் நடவடிக்கை ஒத்திவைப்பதாக தெரிவித்துள்ள அவர், ஒலிம்பிக் தூதுவர் பொறுப்பை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜ்ஜு, நம்மை பொறுத்தவரை மேரிகோமே (Mary Kom)வெற்றியாளர் எனவும் நடுவர்களின் புள்ளிகள் கணக்கிடும் முறை வருத்தம் அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.