சீனாவில் கட்டுக்கடங்காத கொரோனா; மீண்டும் அமுலுக்கு வந்த ஊரடங்கு
சீனாவின் முக்கிய பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்கடங்காத வகையில் அதிகரித்து வருவதன் காரணமாக மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவில் அக்டோபர் 1ஆம் தேதி தேசிய விடுமுறை தினம் விடப்பட்டது என்பதும், இந்த ஒரு வார கால விடுமுறை பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.
இந்த ஒரு வாரத்தில் ஆனால் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு 3 மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து கொரோனா அதிகரிக்கப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமல்படுத்தப்பட்டு உள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.
சீனாவின் பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவு மற்றும் கட்டுப்பாடு மீண்டும் அமுலுக்கு வந்திருப்பதால் பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகின்றது.