தடுப்பூசி செலுத்தாதவர்களை... பிரான்ஸ் ஜனாதிபதியின் தரக்குறைவான பேச்சால் வெடித்த சர்ச்சை
பிரான்சில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் மீது ஆத்திரம் கொண்டு தரக்குறைவாக விமர்சித்த ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் கடும் கண்டனங்களை எதிர்கொண்டு வருகிறார்.
பிரான்ஸ் நாட்டில் நாளுக்கும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது. புதிய கொரோனா மாறுபாடான ஓமிக்ரான் ஐரோப்பிய நாடுகளில் மிக வேகமாகப் பரவிவருகிறது.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை செய்தி ஊடகத்துக்குப் பேட்டியளித்த ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், தடுப்பூசி செலுத்தாதவர்களை சிறையில் அடைக்கப்போவதில்லை. அவர்களைக் கட்டாயப்படுத்தி தடுப்பூசி செலுத்தப் போவதும் இல்லை.
வரும் ஜனவரி 15ம் திகதி முதல் தடுப்பூசி செலுத்தாதவர்கள் உணவகங்கள் செல்ல முடியாது, திரையரங்குக்குள் நுழைய முடியாது. தடுப்பூசி போடாதவர்களை மிகக் கேவலமான உதாசீனப்படுத்தப் போகிறேன். அதுதான் இனி அரசின் கொள்கை என்று காட்டமாக கூறினார்.
ஜனாதிபதி மேக்ரானின் தரக்குறைவான விமர்சனம் எதிர்க்கட்சிகளின் கண்டனத்தைப் பெற்றுள்ளது.
வலதுசாரி தலைவரான மரைன் லே பென், ஒரு ஜனாதிபதியாக இருப்பவர் இவ்வாறாக தரம் தாழ்ந்து பேசக் கூடாது என சமூக ஊடகங்களில் காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.