டொரன்டோவில் பனிப்பொழிவு குறித்து எச்சரிக்கை
கனடாவின் டொரன்டோ பகுதியில் பனிப்பொழிவு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது கனடிய சுற்றுச்சூழல் துறை இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த குளிர்கால பருவத்திற்கான முதல் பனிப்பொழிவு நிலைமை இன்றைய தினம் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே வாகன போக்குவரத்திற்கு பாதிப்புகள் ஏற்படும் சாத்தியங்கள் உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் போக்குவரத்தில் ஈடுபடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
நகரம் முழுவதும் சுமார் இரண்டு முதல் பத்து சென்றிமீற்றர் வரையான பனிப்பொழிவு ஏற்படக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. சூழ்நிலைக்கு ஏற்றவாறு வாகன சாரதிகள் வாகனங்களை செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பனிப்பொழிவின்போது ஏற்படக்கூடிய விபத்துக்களை தடுப்பதற்கு டொரன்டோ நகராட்சி பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சாலைகள் வழுக்கும் தன்மையை தடுக்க உப்பு கலந்த நீர் தெளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பணிப்பொழிவு அதிகமாக காணப்படுவதனாலும் குளிரடனான காலநிலையினாலும் வீடற்றவர்கள் தங்குவதற்கு கதகதப்பான தங்குமிடங்கள் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.