கனடாவில் 4.8 மில்லியன் புதிய வீடுகள் தேவை
கனடாவில் எதிர்வரும் 10 ஆண்டுகளில் மொத்தம் 4.8 மில்லியன் புதிய வீடுகள் கட்டப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
கனடாவின் வீட்டு வசதி மற்றும் வீட்டு மனை கூட்டுத்தாபனம் (Canada Mortgage and Housing Corporation - CMHC) வெளியிட்ட புதிய அறிக்கையின் பிரகாரம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இது 2019ஆம் ஆண்டு காணப்பட்ட வீட்டு வசதித் (affordability) நிலையை மீட்டெடுக்க இவ்வாறு 4.8 மில்லியன் வீடுகள் தேவையென குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வீடுகள் ஆண்டுக்கு 4.3 இலட்சம் முதல் 4.8 இலட்சம் வரை கட்டப்பட வேண்டியிருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இது தற்போதைய வீட்டு நிர்மாண வேகத்தை இரட்டிப்பாக்கும் அளவிலான தேவை என்பதை அறிக்கை வலியுறுத்துகிறது.
2025 மே மாதம் வரை 90,760 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.