யெமனில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதல் : 53 பேர் பலி
யெமன் மீது அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 53 பேர் பலியாகியுள்ளனர். ஏமன் நாட்டில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பல பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
அவர்கள் செங்கடல் பகுதியில் கப்பல்களை வழிமறித்து தாக்குதலிலும் ஈடுபட்டு வருகின்றனர். பிற கப்பல்கள், விமானம் மற்றும் ஆளில்லா விமானங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இதற்கு எதிராக சர்வதேச நாடுகள் குரல் கொடுத்து வருகின்றன.
வான்வழி தாக்குதல்
இந்நிலையில், யெமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்படி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, விமானந்தாங்கி கப்பலில் இருந்து போர் விமானங்கள் புறப்பட்டு சென்றன.
இதன் தொடர்ச்சியாக, யெமனில் நடந்த வான்வழி தாக்குதலில் ஆரம்பத்தில் 24 பேர் பலியான நிலையில் தொடர்ச்சியாக அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 5 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் உள்பட இதுவரை 53 பேர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யெமன் தலைநகர் சனா மற்றும் சவுதி அரேபியா எல்லையருகே கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கம் நிறைந்த சாடா உள்ளிட்ட பிற மாகாணங்களை இலக்காக கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இத் தாக்குதல் மத்திய கிழக்கு பகுதியில் இது மிக பெரிய இராணுவ நடவடிக்கையாக இருக்கும் என கூறப்படுகிறது.