சிரியா மீதான இஸ்ரேலிய தாக்குதல் முடிவுக்கு வரும் என அமெரிக்கா அறிவிப்பு
சிரியா மீது இஸ்ரேலியப் படையினர் நடத்தும் தாக்குதல்கள் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ இதனை அறிவித்துள்ளார்.
டமாஸ்கஸில் உள்ள சிரிய பாதுகாப்பு அமைச்சையும், தெற்கு சிரியாவில் உள்ள அரச படைகள் மீதும் இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
தமது படைகள் 'ட்ரூஸ் இன சகோதரர்களைக் காப்பாற்றவே', இந்த தாக்குதல்களை நடத்துவதாக இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த தாக்குதல்களைத் துரோக ஆக்கிரமிப்பு என்று சிரிய வெளியுறவு அமைச்சு குற்றம் சாட்டியது.
அதேநேரம், தற்போதைய நெருக்கடியான நிலையை அமைதியான முறையில் தீர்ப்பதற்கு அமெரிக்காவும் அரேபிய நாடுகளும் மேற்கொள்ளும் முயற்சியை வரவேற்பதாக சிரிய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கிடையில் சிரியாவில் ட்ரூஸ் போராளிகளுக்கும் பெடோயின் பழங்குடியினருக்கும் இடையிலான மோதல்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்தது முதல் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.