வணிக வளாகத்தில் காதலியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த காதலன்!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் காதலியை காதலன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் கலிபோர்னியா மாகாணத்தில் ரோஸ்வில்லே பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றுக்கு 29 வயதான சிம்ரன்ஜித் சிங் என்ற சீக்கிய வாலிபர் தனது காதலியுடன் சென்றுள்ளார்.
அங்கு இருவருக்கும் ஏற்பட்ட சண்டையில், குறித்த நபர் தனது காதலியை சுட்டுக்கொலை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பின்னர் அதே இடத்தில் துப்பாக்கியை போட்டு விட்டு தப்பியுள்ளார்.
இதுபற்றி வெளியான செய்தி அறிக்கையில்,
சிம்ரன்ஜித் சிங் சம்பவத்திற்கு பின்னர் ஷாப்பிங் செய்து, பணம் கொடுத்து சட்டை ஒன்றை வாங்கியுள்ளார்.
பின்பு புதிய சட்டையை போட்டு கொண்டு, பழைய சட்டையை தனது பையில் மறைத்து வைத்து கொண்டார்.
பின்னர் அங்கு பொறுத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவின் உதவியுடன் சந்தேகநபரான சிம்ரன்ஜித் சிங்கை பொலிஸார் கைது செய்துள்ளனர்.