தவறான முகவரிக்கு சென்ற வீட்டுப் பணிப்பெண் சுட்டுக்கொலை
அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தில், தவறான முகவரிக்கு சென்ற வீட்டு பணிப்பணெ் ஒருவரை வீட்டின் உரிமையாளர் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது, அமெரிக்க அதிகாரிகள் சம்பவத்தில் குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்படுவது தொடர்பில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாரியா ஃப்ளோரின்டா ரியோஸ் பெரெஸ் (32) என்பவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இந்தியானாபோலிஸ் நகர புறநகர் பகுதியான விட்ஸ்டவுன் (Whitestown) பகுதியில் நடந்தது.
குறித்த பெண்ணும் அவரது கணவரும் வீட்டுக்குள் பிரவேசிக்க முயன்றதற்கான எவ்வித சான்றுகளும் இல்லை.
எனினும், வீட்டின் உள்ளிருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குவாத்தமாலா வம்சாவளியைச் சேர்ந்த மாரியா பெரெஸ், குவாட்டிமாலா நான்கு பிள்ளைகளின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது. போலீசார் வீட்டின் உரிமையாளரின் பெயரை பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை.