உலகின் முதல் Al போர் விமானத்தை உருவாக்கிய அமெரிக்கா
உலகின் முதல் AI போர் விமானத்தை அமெரிக்காவின் KRATOS Defense & Security Solutions நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இந்த நவீன போர் விமானம், F-16 வகை இயந்திரத்தைப் பயன்படுத்தி 2,000 கடல் மைல்கள் (சுமார் 3,704 கிலோமீட்டர்கள்) தூரம் வரை, அதிகபட்சமாக 50,000 அடி (சுமார் 15,240 மீட்டர்) உயரத்தில் பறக்கக் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தை இயக்க ஓடு பாதை கூட தேவையில்லை, நிலத்திலிருந்து நேரடியாக புறப்படும் எனக் கூறப்படுகிறது. X-Bat வானூர்தியில் உள் ஆயுதக் கூடம் அமைக்கப்பட்டுள்ளதுடன், அதில் வானை நோக்கியும் தரையை நோக்கியும் தாக்குதல் ஆயுதங்கள் பொருத்தக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, பெரிய அளவிலான தாக்கு குண்டுகளை வெளிப்புறங்களில் பொருத்தும் வசதியும் உள்ளது. அதேவேளை உலகின் முதல் செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் VTOL போர் விமானம் என Shield AI நிறுவனம், அறிவித்துள்ளது.