அமெரிக்காவின் ஆச்சி 100வது வயதில் காலமானார்
அமெரிக்க தொலைக்காட்சிகளில் ஏராளமான தொடர்களில் நாயகர் மற்றும் நாயகிகளுக்கு தாயாக நடித்து அந்நாட்டு ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்திருந்த நடிகை ஜூன் லாக்ஹார்ட், தன்னுடைய 100வது வயதில் காலமானார்.
தமிழக திரைப்படத்தில் ஏராளமான படங்களில் தாய் கதாப்பாத்திரத்தில் நடித்து கின்னஸ் புத்தகத்திலும் இடபிடித்த நடிகை மனோரமாவை ஆச்சி என அவரது ரசிகர்கள் அழைப்பது வழக்கம்.

அமெரிக்காவின் ஆச்சி
தமிழக திரையுலகில் கொடிகட்டிப் பறந்த ஆச்சி மனோராமாவைப் போலவே அமெரிக்காவில் இவர் திகழ்ந்தார். இதனால், இவரை இந்தியர்கள் அமெரிக்காவின் ஆச்சி என அழைப்பார்கள்.
வயது மூப்பு காரணமாக கலிஃபோர்னியாவில் உள்ள தன்னுடைய இல்லத்தில் அவர் காலமானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜூன் லாக்ஹார்ட் பெற்றோர் ஜூன் மற்றும் கத்லீன் இருவருமே நடிகர்கள். இவர் தன்னுடைய பெற்றோருடன் 8 வயதில் முதன் முதலில் திரையில் தோன்றினார்.பிறகு இவர் சில படங்களில் நடித்தார். ஆனால், இவருக்கு சின்ன திரைதான் கைகொடுத்தது. பல தொடர்களில் பாசம்கொண்ட தாயாக நடித்து பெயர் பெற்றவர் இன்று காலமானார்.
அவரது மறைவுக்கு ஹாலிவுட் திரை நட்சத்திரங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அந்நாட்டில், சிறந்த நடிகைகளுக்கு வழங்கப்படும் ஏராளமான விருதுகளை வென்றிருக்கிறார்.