ஒருவழியாக கனடாவுக்கு தூதர் ஒருவரை நியமித்தது அமெரிக்கா...
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
David Cohen என்பவர் கனடாவுக்கான அமெரிக்க தூதராக பொறுப்பேற்க உள்ளார்.
அமெரிக்காவைப் பொருத்தவரை, தூதர்கள் முன்மொழியப்படுதல் செனேட்டால் அங்கீகரிக்கப்படவேண்டும். இவ்வளவு காலமாக அது காலதாமதமாகிக்கொன்டே இருந்த நிலையில், David Cohenஉடைய பெயர் கனடா தூதராக முன்மொழியப்பட்டபோது, யாரும் அதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. செனேட் அவரை ஏற்றுக்கொண்டதால், அவர் கனடாவுக்கான அமெரிக்க தூதராவது உறுதியாகியுள்ளது.
2019ஆம் ஆண்டு, Kelly Craft கனடா தூதர் பதவியிலிருந்து விலகியபிறகு, கனடாவுக்கென அமெரிக்கத் தூதர்கள் யாரும் நியமிக்கப்படாமலே இருந்துவந்தது.
எரிபொருள் பிரச்சினை, எண்ணெய்க்குழாய் பிரச்சினை, மின்சார வாகனங்கள் பிரச்சினை என இரு நாடுகளுக்கும் இடையில் பல்வேறு பிரச்சினைகள் நிலவும் நிலையில், David Cohen கனடாவுக்கான அமெரிக்கத் தூதராக பொறுப்பேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.