போர் நிறுத்தம் நோக்கில் டிரம்ப் முயற்சி ; ரஷ்யா மீது மீண்டும் அமெரிக்கா பொருளாதாரத் தடை
ரஷியாவின் முழு எண்ணை விநியோகத்துக்கும் பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தி உள்ளார்.
ரஷியா-உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.இதுதொடர்பாக ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் டிரம்ப் பேச்சு வார்த்தை நடத்தினார்.

இதில் டிரம்ப்-புதின் இடையேயான பேச்சுவார்த்தை அமெரிக்காவின் அலாஸ்கா வில் நடந்தது. ஆனால் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதற்கிடையே டிரம்ப்-புதின் இடையேயான சந்திப்பு ஹங்கேரியின் புடா பெஸ்ட் நகரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் இந்த சந்திப்பு திடீரென்று நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் போரை நிறுத்த ரஷியா மறுத்ததால் அந்நாட்டின் 2 மிகப்பெரிய கச்சா எண்ணை நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடையை விதித்தது.
இந்த நிலையில் ரஷிய அதிபர் புதினின் சிறப்பு தூதர் கிரில் டிமிட்ரிவ், பேச்சுவார்த்தைக்காக அமெரிக்காவுக்கு சென்று உள்ளார். அமெரிக்காவின் அழைப்பின்பேரில் இந்த பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக கிரில் டிமிட்ரிவ் கூறியதாவது,
அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாக அதிகாரிகளுடனான சந்திப்புகளில் உக்ரைன் போர் குறித்த ரஷியாவின் நிலைப்பாட்டை தெரிவிப்பேன். போரை முடிவுக்கு கொண்டு வருவதில் ரஷியா, அமெரிக்கா, உக்ரைன் ஆகியவை உண்மையில் ஒரு தீர்வுக்கு மிக அருகில் உள்ளன.

இதனால் போர் நிறுத்தம் விரைவில் ஏற்பட லாம்.புதின்-டிரம்ப் இடை யேயான சந்திப்பு ரத்து செய்யப்–படவில்லை. அந்த சந்திப்பு பின்னர் நடைபெறும்.
ரஷியா-அமெரிக்கா இடையே பேச்சு–வார்த்தை தொடரும். ஆனால் ரஷியா வின் நலன்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு மரியாதையுடன் நடத்தப் பட்டால் மட்டுமே நல்ல முடிவு ஏற்படும்.
ரஷியாவின் எண்ணை நிறுவனங்கள் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடைகள் எங்களுக்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் நம்பவில்லை.
அமெரிக்க எரிவாயு நிலையங்களில் பெட்ரோல் விலையை அதி கரிக்கதான் வழிவகுக்கும். ரஷியா குறைவான பீப்பாய் களை அதிக விலைக்கு விற்கும்.
இந்த தடைகள் பேச்சுவார்த்தைகளை தடம்புரள செய்யாது என அவர் கூறினார்.