அமெரிக்க-ஈரான் இராஜதந்திர முயற்சிகளால் பாரிய பின்னடைவு
அமெரிக்கத் தூதுக்குழுவின் பாகிஸ்தான் பயணத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரத்து செய்துள்ள அறிவிப்பு, நிலவி வரும் போர்ச் சூழலைத் தணிக்க முன்னெடுக்கப்பட்ட ராஜதந்திர முயற்சிகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
அல் ஜசீரா இதனை தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தூதரக வழியிலான பேச்சுவார்த்தைகளின் மீதான நம்பிக்கையைத் தகர்த்துள்ளது.

அத்துடன், அமெரிக்க ஜனாதிபதியால் பாகிஸ்தானிலேயே தங்கியிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்த செய்தியாளர்கள், தற்போது மீண்டும் தாயகம் திரும்புமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், அமெரிக்காவிடம் தாங்கள் சமர்ப்பித்த 10 அம்சக் கோரிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும், அதில் உறுதியாக இருப்பதாகவும் ஈரானியத் தூதுக்குழு தெரிவித்துள்ளது.
பேச்சுவார்த்தைகள் தற்காலிகமாகப் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில், இது பிராந்திய அமைதியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
"அவர்கள் பேச விரும்பினால் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்" என்ற அமெரிக்காவின் தற்போதைய நிலைப்பாடு, ஈரானின் அடுத்தகட்ட நகர்வைப் பொறுத்தே அமையும் என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.